கடை வைக்க இடம் கேட்டு மாற்றுத்திறனாளி மனு
கரூர், கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து கொள்ள இடம் வழங்க வேண்டும் என, அரவக்குறிச்சி அருகில் வேலன்செட்டியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்திக், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:மாற்றுத்திறனாளியான எனக்கு தாய் மட்டுமே உள்ளார். அவருக்கு பார்வை திறன் குறைபாடு உள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து நடத்த, இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனது குடும்பத்தின் நிலையை கருதி மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.