உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அசல், வட்டி செலுத்த முடியாமல் தவிப்பு அடுக்குமாடி திட்ட பயனாளிகள் மனு

அசல், வட்டி செலுத்த முடியாமல் தவிப்பு அடுக்குமாடி திட்ட பயனாளிகள் மனு

கரூர்: தோரணக்கல்பட்டியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட அடுக்குமாடி குடியிருப்பை ஒப்ப-டைக்கவில்லை என்பதால், அதற்காக வாங்கிய கடனுக்குரிய, அசல், வட்டி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருவதாக, அதன் பயனாளிகள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்-டியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்-டத்தில், 640 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்-பட்டன. கடந்த, 2021ம் ஆண்டு வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 640 பேரிடம் தலா, 1.18 லட்சம் ரூபாய் தொகை செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது.ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி தான் பணம் செலுத்தி இருக்கிறோம். தற்-போது, வீட்டிற்கு வாடகையும் கொடுக்க முடி-யாமல், கடனுக்குரிய அசல், வட்டி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி-யத்தில் கேட்டால் இன்னும், 2 மாதத்தில் கொடுத்து விடுவோம் என, ஓராண்டுக்கு மேலாக கூறி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ