மேலும் செய்திகள்
பூவன் வாழை விலை வீழ்ச்சி கவலையில் விவசாயிகள்
17-Nov-2024
அன்னாசி பழம்விற்பனை ஜோர்கரூர், டிச. 8-தமிழகத்தில் கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ளிட்ட, சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அன்னாசி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் தமிழக தேவைக்கு, கேரளா மாநிலத்தில் இருந்து, அன்னாசி பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கேரளா மாநிலத்தில் தற்போது, அன்னாசி பழம் சீசன் தொடங்கியுள்ளது.இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், திருச்சி, ஈரோடு மற்றும் கோவை சாலைகளில், கேரள வியாபாரிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ அன்னாசி பழம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
17-Nov-2024