ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
கரூர் :கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி தின நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், சமூக நீதி உறுதிமொழியை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலமெடுப்பு), மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.