அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
கரூர், நவ. 2-கரூரில் அனுமதி இல்லாமல், பிளக்ஸ் பேனர் வைத்ததாக, த.வெ.க., நிர்வாகிகள் இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், புலியூர் அமராவதி நகரை சேர்ந்தவர் ராமன், 24; புலியூர் கிளை த.வெ.க., செயலாளர். இவர், அனுமதி இல்லாமல் அமராவதி நகர் லைப்ரரி முன், த.வெ.க., பிளக்ஸ் பேனரை வைத்துள்ளார். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் அளித்த புகார்படி, ராமன் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில், கரூர் ஒன்றிய த.வெ.க., பொருளாளர் அசார், 36; அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தார். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., சண்முகானந்த வடிவேல் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், அசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.