மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவி தற்கொலை
04-Jul-2026
குளித்தலை:குளித்தலை, அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 51; கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹர்ஷினி, 16, முசிறி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 19 இரவு, ஹர்ஷினி மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த தந்தை சிவக்குமார், 'துாங்க வேண்டியது தானே; ஏன் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய்,'' என, அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மகள், அறைக்குள் சென்று துாக்கிட்டுக்கொண்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஹர்ஷினி உயிரிழந்தார். சிவக்குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
04-Jul-2026