மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் அன்புமணி நடைபயணம்
15-Aug-2025
கரூர், கரூர் ஒருங்கிணைந்த பா.ம.க., (அன்புமணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட செயலர் சுரேஷ் தலைமையில், தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.அதில், கரூர் மாவட்டத்தில் பா.ம.க., மாநில தலைவர் அன்புமணியின் எழுச்சி நடை பயணம், உறுப்பினர் சேர்க்கை, அன்புமணி வெளியிட்ட விடியல் எங்கே என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்குதல், வரும் சட்டசபை தேர்தல் செயல்பாடுகள் குறித்து, மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கார்த்தி விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி, மேற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத், முன்னாள் மாவட்ட தலைவர் மணி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பசுபதி, நகர செயலாளர் ராக்கி முருகேஷன் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Aug-2025