மேலும் செய்திகள்
மோசமான சாலையால்கடும் அவதி
17-Dec-2024
கிருஷ்ணராயபுரம்: புதுப்பட்டி பகுதியில் இருந்து செல்லும், வயலுார் பிரிவு சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியில் இருந்து, வயலுார் பிரிவு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் பழையஜெயங்கொண்டம் வரை செல்கின்றனர். தற்போது சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்-களில் செல்லும் போது தடுமாற்றம் ஏற்படுகிறது. எனவே, சாலையை டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-Dec-2024