உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான சாலையால் அவதி

குண்டும், குழியுமான சாலையால் அவதி

கரூர்:கரூர் அருகே, சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, 38வது வார்டு தான்தோன்றிமலை பாலாஜி நகரில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், பாலாஜி நகர் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில், தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.எனவே, தான்தோன்றிமலை பாலாஜி நகரில் சாலையை உடனடியாக, பராமரிக்கும் வகையில், புதிதாக தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்