உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் :கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, வைகாசி மாத பிரதோஷ விழாவில், பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகமாலீஸ்வரர் கோவிலில், நேற்று வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது. நந்தி சிலைக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பிறகு, வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி, மூலவர் மேகமாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை