மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
14-Nov-2024
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுகரூர், நவ. 29-பிரதோஷத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 முதல், 5:00 மணி வரை பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் சிலைகளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி நேற்று மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.*புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
14-Nov-2024