உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய பணிகளுக்கு பூஜை

புதிய பணிகளுக்கு பூஜை

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் கிழக்கு, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், புதிய பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார் பஞ்சாயத்து, சரவணபுரம் ஆதி திராவிடர் காலனிக்கு புதிய தார்ச்சாலை அமைத்தல். நடுப்பட்டி காலனி முதல் தாதம்பட்டி வரையிலான தார்ச்சாலையை பலப்படுத்துதல், கண்ணமுத்தாம்-பட்டி பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்தல், கிருஷ்ணராய-புரம் தெற்கு ஒன்றியம், பஞ்சப்பட்டி முதல் போத்துராவூத்தன்-பட்டி வரை தார்ச்சாலை பலப்படுத்துதல், பஞ்சப்பட்டி கே.பி.எஸ். கார்டன் முதல் அறிவழகன் வீடு வரை சாலை புதுப்-பித்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கரி-காலன், வயலுார் பஞ்சாயத்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !