பிரதமர் பிறந்த தினவிழா கொண்டாட்டம்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின், 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் ஜவஹர்லால் தலைமையில், அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மாவட்ட செயலர்கள் முருகேசன், பானுப்பிரியா ரவிச்சந்திரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர்கள் ரேணுகா, வேல்முருகன், பொதுச் செயலர் நாகராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் விஜய், அருண், அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.