உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் மின் பணியாளர்கள் சங்க 20ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

தனியார் மின் பணியாளர்கள் சங்க 20ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

குளித்தலை: கரூர் மாவட்ட தனியார் மின் பணியாளர்கள் சங்க, 20ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி, நேற்று காலை, 11:00 மணிக்கு, குளித்-தலை ரயில்வே சாலையில் உள்ள சுப்பிரமணிய மஹாலில் நடந்தது.மாவட்ட தலைவர் முத்தழகு தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சுகுமார், செயல் தலைவர் சண்முகம், துணைத்தலைவர்கள் புஷ்பநாதன், பொன்னுசாமி, குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, மின் ஒப்பந்ததாரர்கள், மின் இணைப்பாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம், தாம்பரம் சங்க மாவட்ட தலைவர் தாமோதரன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட சங்க உறுப்பினர்களுக்கு, சங்க அடையாள அட்டை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். மாநில பொறுப்பாளர்கள், கட்டட பொறியாளர்கள், சங்க நிர்வா-கிகள், எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர்கள், மின்சாதன உற்பத்தியா-ளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி