உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மாவட்ட அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கரூர் :கரூர், வெண்ணைமலையில் உள்ள கொங்கு மேல்நிலைப் பள்ளியில், காஸ்பரோ செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இங்கு, 7, 9, 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியை, கொங்கு பள்ளி தாளாளர் பாலுகுருசுவாமி தொடங்கி வைத்தார். போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 800 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.முதலிடம் பிடித்தவர்களுக்கு சைக்கிள்கள், சான்றிதழும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், யங் இந்தியன்ஸ் சேர்மன் யோகேஷ், காஸ்பரோ செஸ் அகாடமியின் நிறுவனர் நேஷனல் ஆர்பிட்டர் புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ