மேலும் செய்திகள்
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
22-Jul-2025
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள், 430 மனுக்களை அளித்தனர்.கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற, 12 மாணவ, மாணவியருக்கும், தமிழ்நாடு அரசின் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தங்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்காக மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ள, கரூர் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 4 மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ், கேடயங்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல் என மொத்தம், 2 பயனாளிகளுக்கு, 16 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்- கலெக்டர் சுவாதி ஸ்ரீ, ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.
22-Jul-2025