உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் போட்டி தேர்வுக்கான நிகழ்ச்சி

அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் போட்டி தேர்வுக்கான நிகழ்ச்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4- 2023 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராகுல் ரகுபதி சிறப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவியரிடம் பேசுகையில்,''அரசு பணிகளை அடைவது என்பது வெறும் கடின உழைப்பு மட்டும் போதாது. அது சரியான திட்டமிடலும், தொடர் முயற்சியும் சேர்ந்த கலவையாகும். மாணவர்கள் தங்களின் இலக்கை நிர்ணயித்து, தினசரி படிப்பை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், ஒவ்வொரு சிறு தோல்வியிலிருந்தும் பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்,'' என்றார்.மேலும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள், பாடத்திட்டங்களை அணுகும் விதம், நேர மேலாண்மை மற்றும் நேர்மறை எண்ணத்துடன் எவ்வாறு படிப்பை தொடர்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை