உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொலை மிரட்டல் விடுத்த பெயின்டருக்கு காப்பு

கொலை மிரட்டல் விடுத்த பெயின்டருக்கு காப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த வெள்ளப்பட்டி பஞ்., வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி, 54; தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர். இவரது மகன் உடல்நலமின்றி, வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த, 20ல் சிவாஜி மகனின் மொபைல் போனிற்கு, அதே ஊரை சேர்ந்த பெயின்டிங் கான்ட்ராக்டர் லோகநாதன், 25, என்பவர் அழைத்துள்ளார். அந்த போன் அழைப்பை சிவாஜி எடுத்து பேசியுள்ளார். அப்போது, தகாத வார்த்தைகளால் திட்டிய லோகநாதன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலடைந்த சிவாஜி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், லோகநாதனை கைது செய்தனர்.* குளித்தலை அடுத்த கருப்பத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, 45; கடந்த, 20ல் மகன் யோகேஷூடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த செல்லத்துரையின் தம்பி செல்வக்குமாரின் மகன் தீபன், 20, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்லதுரை கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் தீபனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை