உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு மறியல்

சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு மறியல்

சென்னிமலை, சென்னிமலை-ஊத்துக்குளி வழியில் சிறுக்களஞ்சி கிராமம் உள்ளது. இங்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் அமைத்து, சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் நடக்கிறது. ஒரு வாரமாக குடிநீர் வராததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் சிறுக்களஞ்சி பஞ்., அலுவலகம் எதிரே பிரதான சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சென்னிமலை போலீசார், சென்னிமலை யூனியன் பி.டி.ஓ., பாலமுருகன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்பு போலவே அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவில் குடிநீர் சப்ளை செய்ய மக்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை