உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர் 'கரூர் கலெக்டர் அலுவலத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்பட, 438 மனுக்களை பெற்றார்.தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 நபர்களுக்கு, 5.71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான செயற்கை கால்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், சப்- கலெக்டர் பிரகாசம், மாநகராட்சி கமிஷனர் சுதா, ஆர்.டி.ஒ., முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை