உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 457 மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில், காதொலி கருவிகள் மற்றும் பிரைலி கடிகாரம் என, 16 பயனாளிகளுக்கு, 57,540 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழா தொடர்பாக கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் என, 12 பேருக்கு சான்றிதழ், பரிசு தொகை என மொத்தம், 43 பயனாளிகளுக்கு, 3.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை