உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் மஞ்சப்பை வழங்கல்

கரூர் பஸ் ஸ்டாண்டில் மஞ்சப்பை வழங்கல்

கரூர்: ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை பிளாஸ்டிக் கழிவு சேக-ரிப்பு மற்றும் சுத்தம் செய்வது, மஞ்சப்பை பயன்பாட்டை அதிக-ரிக்க செய்வது ஆகியவற்றை சந்தை வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்களில் நடத்த, தமிழக அரசால் அறி-வுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி சார்பில் மஞ்-சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை மேயர் தரணிசரவணன் தலைமைவகித்தார். மக்களிடம், ஒரு-முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு, மஞ்சப்பை வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் சுதா, மண்டல தலைவர் அன்பரசன், கவுன்சிலர் நிர்மலா தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !