மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்குளித்தலை, அக். 11-குளித்தலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். 151 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் அனிதா தலைமையில், 345 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.கோட்டமேடு ஆதிதிராவிட நல உயர் நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கலைமதி தலைமையில் நடந்த விழாவில், 48 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.