உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு பெயர்கள் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

தெரு பெயர்கள் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் வார்டு எண் 13ல், புதிய பெயர் வைப்பதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில், ஜாதி பெயரில் உள்ள தெரு பெயர்களை நீக்கி விட்டு, புதிய பெயர்கள் வைப்பதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் அரசு உத்தரவின்படி நடத்தப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சார்பில், கோவக்குளம் வார்டு எண் 13ல் நேற்று காலை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், 32 பெயர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அம்பேத்கர் பெயர் இல்லாமல் இருந்தால், அவரது பெயர் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் மேற்கு ஒன்றிய செயலர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி