சேதமான அங்கன்வாடி மையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி: மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 3வது வார்டு வடக்கு தெருவில், கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அங்கன்வாடி மையத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள், இம்மையத்தில் பயின்று வந்தனர். இந்நிலையில், அங்கன்வாடி மையம், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை சொந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. ஆனால், அந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்ததால், தனியார் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தை தற்காலிக இடமாற்றம் செய்தனர். தற்போது வரை, சேதமான அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவில்லை. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில், சேதமான அங்-கன்வாடி மையத்தை விரைவில் சீரமைத்து சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர், பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.