உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த ரேஷன் கட்டடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த ரேஷன் கட்டடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் அருகே, ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட, ஆத்துாரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், கட்டடம் வலுவிழந்து, கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. தற்போது, கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள், அச்சத்துடனே வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கட்டடம் அல்லது சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை