உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாதம்பாளையம் ஏரிக்கு நீர் கொண்டு செல்லஆய்வு பணிக்கு நிதி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு கரூர்:க.பரமத்தி அருகே, தாதம்

தாதம்பாளையம் ஏரிக்கு நீர் கொண்டு செல்லஆய்வு பணிக்கு நிதி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு கரூர்:க.பரமத்தி அருகே, தாதம்

தாதம்பாளையம் ஏரிக்கு நீர் கொண்டு செல்லஆய்வு பணிக்கு நிதி: பொதுமக்கள் எதிர்பார்ப்புகரூர்:க.பரமத்தி அருகே, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, ஆய்வு செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அமராவதி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும் காலத்தில், நீரை சேமித்து வைக்க, அணைப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம், 3,000 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெற்று வந்தது. இந்நிலையில், மழை காலங்களில் ராஜ வாய்க்காலில் அதிகப்படியாக செல்லும் தண்ணீர், வாய்க்காலை உடைத்து கொண்டு விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் மாற்று ஏற்பாடாக கடந்த, 1881ம் ஆண்டு கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பெரிய தாதம்பாளையத்தில், 360 ஏக்கரில் ஏரியை உருவாக்கி அதில் தண்ணீர் சேமிக்கப்பட்டது.இந்த நீர் வறட்சி காலங்களில், வடகிழக்கு பகுதியில் உள்ள நீர் போக்கி மூலம் வெளியேற்றப்பட்டு, கரூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் தாதம்பாளையம் ஏரிக்கு வரும், நீர் வரத்து பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்து, தற்போது முழுவதுமாக வற்றி போயுள்ளது. இதனால், கரூர், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால், தாதம்பாளையம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு வர, நிதி ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:தாதம்பாளையம் ஏரிக்கு, 1950ம் ஆண்டு அணைப்பாளையத்தில் இருந்து முடிகணம், தொட்டிவாடி, எருமைப்பட்டி புதுார் வழியாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. பிறகு பெரிய தாதம்பாளையம் ஏரி கடந்த, 1970ம் ஆண்டு பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில், கடல் போல காட்சியளித்த தாதம்பாளையம் ஏரி தற்போது, பாலைவனம் போல் உள்ளது.இறுதியாக கடந்த, 2002ல், 16 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆறு நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட திட்டமும் கிடப்பில் உள்ளது. அமராவதி வெள்ள நீர் உபரி திட்டத்தை செயல்படுத்தினால், சின்னமுத்தாம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லிசெல்லி பாளையம் குளம், தொட்டிவாடி குளம், நிமித்தப்பட்டி குளம், கிழுவம்பாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், 75 க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும், 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். எனவே, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, ஆய்வு செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை