மேலும் செய்திகள்
க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை
09-Jun-2025
கரூர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில், க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கில் செல்கின்றன. இதனால், க.பரமத்தியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான நேரத்தில், போலீசார் க.பரமத்தியில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதுகுறித்து, க.பரமத்தி மக்கள் கூறியதாவது: கரூர்-கோவை சாலை க.பரமத்தி பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள் க.பரமத்தியில் உள்ளது. கிராம பகுதிகளில் இருந்து, செல்லும் பொதுமக்கள் க.பரமத்தி வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்போது, கோவை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால், க.பரமத்தி பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
09-Jun-2025