உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜி.உடையாப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

ஜி.உடையாப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

கரூர், கரூர் மாவட்டம், தோகைமலை அருகில், ஜி.உடையாப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்து கூறியதாவது: தோகைமலை குறு வட்டத்திலுள்ள, 13 குக்கிராமங்களுக்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனித்தனியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர். தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினார்.இங்கு, 250 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே 48 லட்சத்து 8,084 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, சப்-கலெக்டர் பிரகாசம், வேளாண் துறை இணை இயக்குனர் சிவானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ