கொசு உற்பத்தியால் பொதுமக்கள் அவதி
கரூர், அக். 23-கரூரில் பொது குடிநீர் குழாயில் இருந்து, கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால், தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.கரூர் கருப்பாயி கோவில் தெருவில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி யில் கரூர் மாநகராட்சி சார்பில், பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், வீணாகும் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை துாங்க முடியாமல், பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கருப்பாயி கோவில் தெருவில், பொது குடிநீர் குழாய் பகுதியில், கழிவு நீர் செல்லும் வகையில், வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.