பராமரிப்பு இல்லாத கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி
கரூர், கரூர் அருகே பல மாதங்களாக, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி சுக்காலியூரில், சில ஆண்டுகளுக்கு முன், புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அங்கு செல்வதை தவிர்த்தனர். இதனால், தற்போது கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் முளைத்து, புதர்மண்டி காணப்படுகிறது.எனவே, கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து, பயன்பாட்டுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.