சூரிய பொங்கல் வைத்துபொது மக்கள் வழிபாடு
குளித்தலை, :குளித்தலை பகுதியில், நேற்று காலை பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலில், புது மண் பானையில் சூரிய பொங்கல் வைத்தனர்.பின் வாழை இலையில் பொங்கல், காய்கறி, கரும்பு, வாழைப்பழம், சூடம், சாம்பிராணி, தேங்காய் உடைத்து, இயற்கை கடவுளான சூரியனை குடும்ப உறுப்பினர்கள் வணங்கினர். பின்னர், அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர். பலர் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வணங்கினர்.