உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.34 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிக்கு பூஜை

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.34 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிக்கு பூஜை

கரூர், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 44 திட்டப் பணிகள், 7.34 கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் முடிவுற்ற பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, பூமி பூஜையை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,ல், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், செல்லரபாளையம் ரோடு முதல் மாங்காசோளிபாளையம் வரை, 6.46 லட்சம், மாங்காசோளிபாளையம் மெயின் ரோடு முதல் பெரிச்சிப்பாளையம் வரை, 18.66 லட்சம், தன்னாசி கவுண்டனுார் முதல் புன்னம் வரை, 36.31 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.அருமைக்காரன்புதுார் முதல் சின்னவள்ளிபாளையம் வரை, 29.34 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அருமைக்காரன்புதுார் முதல் அழப்பரப்பு சாலை வரை. 13.37 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் காளிபாளையத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் தெருவில் அமைக்கப்பட்ட சமுதாயக்கூடம், நன்னியூர் ஊராட்சி, என்.புதுார் அண்ணா நகரில், 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாடக மேடை, துவரபாளையத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் முன்புறம் புதிதாக கட்டப்பட்ட மண்டபத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.இதன்படி, 6.85 கோடி ரூபாய் மதிப்பில், 39 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி, 48.97 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட, ஐந்து கட்டடங்களை பயன்பாட்டிற்காக தொடங்கி வைப்பு உள்பட மொத்தம், 44 திட்டப் பணிகள், 7.34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !