வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா நேற்று துவக்கம்
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று காலை கோவிலில், கொடியேற்றத்துடன் புரட்டாசி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.அதை தொடர்ந்து, நாள்தோறும் இரவு சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் அக்., 10 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 காலை, 9:15 மணிக்கு தேரோட்டம், 21ல் முத்து பல்லக்கு, 22ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அபி ேஷகம், மஹா தீபாராதனை நடக்கிறது. மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோவிலை சுற்றி, 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்