உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனி ஏற்பாடு மும்முரம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனி ஏற்பாடு மும்முரம்

கரூர் /ல்/;தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். இன்று முதலாவது சனிக்கிழமையையொட்டி, ஏராளமான பக்தர்கள், கோவிலில் வழிபாடு நடத்த அதிகாலை முதல் வர தொடங்குவர்.அதையொட்டி, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள், பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு செல்லும் வகையில், மூங்கில் தடுப்பு அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், இன்று கோவில் வளாகத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை