உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐயப்ப தர்ம பிரசார சபா சார்பில் புஷ்பாஞ்சலி விழா தொடக்கம்

ஐயப்ப தர்ம பிரசார சபா சார்பில் புஷ்பாஞ்சலி விழா தொடக்கம்

கரூர், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரசார சபா, கரூர் மாவட்ட கிளை சார்பில், புஷ்பாஞ்சலி விழா வாசவி மஹாலில் நேற்று தொடங்கியது.அதில் நேற்று காலை, 6:00 மணி முதல் விநாயகர் வழிபாடு, தர்ம சாஸ்திர மூலமந்திர ேஹாமம், 10:30 மணி முதல் வேத கோஷ த்துடன் ஐயப்பனுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து, தர்ம சாஸ்தா ஐயப்பன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசையுடன் ஐயப்பனுக்கு நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி