முயல் வளர்ப்பு பயிற்சி முகாம்
கரூர்:கரூர் அருகே, முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடந்தது. அதில், முயல் வளர்ப்பில் வருமானம் ஈட்டுவது, முயலை தாக்கும் நோய்கள், முயலுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து, பல்வேறு தலைப்புகளில் கொடைக்கானல் மன்னவனுார் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜெகவீரபாண்டியன் விளக்கமளித்து பேசினார். முகாமில், ஆராய்ச்சி மைய தலைவர் சக்திவேல், கால்நடை பண்ணையாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.