மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் திடீர் மழை
18-May-2025
அரவக்குறிச்சி, கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், அரவக்குறிச்சியில் நேற்று பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அதிகாலை 5:00 மணி முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நனைந்தபடி சென்றனர். கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், காலை முதல் சாரல் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால், அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
18-May-2025