மழையால் வரத்து அதிகரிப்பு கொத்தமல்லி விலை சரிவு
கரூர்: கோடை மழை பெய்த காரணத்தால், கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கொத்தமல்லி விலை குறைந்துள்ளது.கடந்த ஜன.,யில், கொத்த மல்லி வரத்து குறைந்து இருந்ததால், ஒரு கிலோ, 80 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை பெய்த காரணத்தால் நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்-டுக்கு, கொத்தமல்லி வரத்தும் அதிகரித்தது.கடந்த ஏப்., மாதம் ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விற்ற கொத்த-மல்லி நேற்று, 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்றது. குறிப்-பாக, சிறிய அளவிலான ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.