உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரத்தில் தானியங்கிசிக்னல் அமைக்க கோரிக்கை

சின்னதாராபுரத்தில் தானியங்கிசிக்னல் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி,:சின்னதாராபுரம், கடைவீதியின் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னதாராபுரம் கடைவீதி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு தென்னிலை சாலை, கரூர் சாலை, மற்றும் தாராபுரம் செல்லும் மூன்று சாலைகள் ஒரே இடத்தில் சந்திப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள், பஸ்கள் அடிக்கடி சென்று வருவதால் சில விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க, மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி