உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்சஸ் பணி ஆசிரியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கை

சென்சஸ் பணி ஆசிரியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கை

கரூர்:'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு, 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், அரசு ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகள் மற்றும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியானது பள்ளி நேரத்திற்கு அப்பாலும், விடுமுறை நாட்களிலும் மேற்கொள்ளப்படுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் உடல், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் கல்வி பணியையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருவதால், அவர்களுக்குரிய நலச்சலுகைகள் வழங்கப்படுவது அவசியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையாக, 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ