மேலும் செய்திகள்
அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
04-Aug-2025
கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மற்றும் பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், சிறுபாலம் கட்டப்பட்டது. விவசாயிகள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த, 2013ல் கரூர் - பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்தது. அப்போது, கிளை வாய்க்கால் மேல்பகுதியில் அமைந்த, சிறுபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தினர்.அப்போது, சிறு பாலம் வழியாக கார், வேன் உள்ளிட்ட வாக-னங்கள் சென்று வருகின்றன. இதனால் சிறுபாலம், சாலை பழுத-டைந்த நிலையில் உள்ளது. பாலம் இடிந்து வாய்க்காலில் விழுந்தால், கழிவுநீர் அமராவதி ஆற்றில் நேரடியாக சேரும் நிலை ஏற்படும்.எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் மீது, கட்டப்பட்-டுள்ள சிறுபாலம் மற்றும் சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
04-Aug-2025