உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை மார்க்கமாக சென்னைக்கு ஏசி பஸ் இயக்க அமைச்சருக்கு கோரிக்கை

குளித்தலை மார்க்கமாக சென்னைக்கு ஏசி பஸ் இயக்க அமைச்சருக்கு கோரிக்கை

குளித்தலை, நவ. 21-குளித்தலை சட்டசபை தொகுதியில் குளித்தலை, பஞ்சப்பட்டி, தோகைமலை ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் கடந்த மூன்று மாதங்களாக, தினமும் இரவு சென்னைக்கு திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.கரூரில் இருந்து, சென்னை க்கு தினசரி ஒரு 'ஏசி' பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் கரூர் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், தனியார் பஸ்கள் மூலம் சென்னை சென்று வருகின்றனர். எனவே, கூடுதலாக கரூரில் இருந்து குளித்தலை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 'ஏசி' பஸ் இயக்கவேண்டும்.இதில், குளித்தலை மக்களுக்கு இருக்கை சீட்டு ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி