உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தை வளாகத்தை துாய்மைப்படுத்த குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள்

சந்தை வளாகத்தை துாய்மைப்படுத்த குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள்

அரவக்குறிச்சி, ஜன. 4-வாரச்சந்தை நாளில், விற்பனைக்காக வரும் வியாபாரிகள் காய்கறி கழிவுகளை அப்படியே விட்டு விட்டு செல்வதால், அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.அரவக்குறிச்சியில், வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாரச்சந்தை நாளன்று தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சந்தையில் தங்கள் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் விற்று தீர்ந்தவுடன், மீதமுள்ள காய்கறி கழிவுகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.மேலும், மறுவாரம் வியாழக்கிழமை கூடும் சந்தை நாள் வரை அந்த கழிவுகள் அந்த இடத்திலேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வாரச்சந்தை கூடிய மறுநாள் தனியார் அல்லது பேரூராட்சி நிர்வாகம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ