உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி கேட்டு தீர்மானம்

அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி கேட்டு தீர்மானம்

கரூர், கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.அதில், வரும் ஜூலை, 9ல் நடக்கவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது, நலிந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது, மகளிர் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து தர வேண்டும், மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் அறிவழகன், செயலாளர் வடிவேலன், துணை செயலாளர் கலாராணி, பொருளாளர் ஞானவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை