உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

கரூர் :தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், துணைத்தலைவர் சிவக்கொழுந்து தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.அதில், ஓய்வூதியர்களுக்கு விழா முன் பணம், 5,000 ரூபாய் உயர்த்தி வழங்கிய, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, குடும்ப பாதுகாப்பு நிதி, இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கு, 70 ஆண்டுகள் நிறைவு பெற்றால், 10 சதவீதமும், 75 ஆண்டுகள் நிறைவு பெற்றால், 15 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, பொதுச்செயலாளர் சிவசங்கரன், இணைச்செயலாளர் கருப்பண்ணன், பொருளாளர் கருப்பன், அர்ஜூனன், பாஸ்கர், ஜெகநாதன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை