பணி ஓய்வு பாராட்டு விழா
குளித்தலை:குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில். வி.ஏ.ஓ., சண்முகசுந்தரத்திற்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரும், பொறுப்பு ஆர்.டி.ஓ.,வுமான சிவக்குமார். நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகேந்திரன், துணை தாசில்தார்கள் நீதிராஜன், ஜெயவேல், மண்டல துணை தாசில்தார் தீபத்திலகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., சங்க பொறுப்பாளர்கள் விஜயேந்திரன், முத்துக்குமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பாராட்டி பேசினர்.புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமார் சிறப்பாளராக கலந்து கொண்டார்.