உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் ஆற்று மணல் பறிமுதல்

 அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் ஆற்று மணல் பறிமுதல்

கரூர்: கரூர் அருகே, அ.தி.மு.க., நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணலை, போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தனபால், 45; அ.தி.மு.க., கிளை செயலர். இவர், ஆண்டாங்கோவில் புதுார் பகுதியில், அரசு அனுமதி மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் மணல் கொட்டி வைத்திருப்பதாக, வி.ஏ.ஓ., சண்முகம், நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை, குறிப்பிட்ட பகுதியில் இருந்த மணலை, 49 லாரிகளில் போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அதேபோல், கரூர் மாவட்டம், கிழக்கு ஆண்டாங்கோவில் புதுாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் இருந்து, அரசு அனுமதி மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் கொட்டப்பட்டிருந்த மணலை, ஐந்து லாரிகளில் நேற்று மாலை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மணல், வாங்கல் சாலை எல்லமேடுவில் உள்ள, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ