உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல்: 160 பேர் கைது

கரூரில் தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல்: 160 பேர் கைது

கரூர், கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த, 160 பேர் கைது செய்யப்பட்டனர்.நாடு முழுவதும் நேற்று, அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம், 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கரூரில் தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட தொ.மு.ச., தலைவர் அண்ணா வேலு தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதில், தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிசாமி, வடிவேலன், முருகேசன், பால்ராஜ், சுடர் வளவன் முருகவேல், அப்பாசாமி உள்பட பலர் பங்கேற்றனர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக, 160 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி