மேலும் செய்திகள்
சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க அறிவுரை
09-Feb-2025
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
23-Jan-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக, கூம்பூர் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம், 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூரிலிருந்து ஈசநத்தம் வழியாக கூம்பூர் வரை, இரு வழி தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.
09-Feb-2025
23-Jan-2025